Saturday, May 29, 2010

அலங்கோலமாய் போன யாழ் அன்னை


சமாதாணம் என்ற பெயரில் யாழ் நகரில் நடைபெறுகின்ற பல நிகழ்வுகள் யாழ் அன்னையின் முகத்தை மாற்ற முயல்கின்றது.இந்த விடயம் தொடர்பாக பல பதிவுகள் பல கோணங்களில் இங்கு பதிவு இடப்பட்டுள்ளது எனவே யாழில் வசிக்கும் என்னால் இந்த விடயம் தொடர்பாக பல கோணங்களில் பார்க்கமுடியும் என நம்புகிறேன்.

முன்னர் அபிவிரித்தி அடயாதபோதிலும் மிகவும் அழகும் அமைதியும் நிறைந்தே காணப்பட்டுள்ளது.ஆனால் தற்போது அபிவிரித்தி என்ற பெயரில் நடைபெறுகின்ற நிகழ்வுகளாள் யாழ் அன்னை தனது தூய்மையை தொலைத்து நிற்கின்றது.மேலும் சிங்கள மக்களது வருகையாள் அரங்குகாணும் பல விபத்துக்கள் மேலும் யாழ் மக்களது மனங்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ள்து.உதாரணங்கள் பல உள்ளன,நேற்று பரித்தித்துறையில் வீடொன்றின் மதிலை உடைத்து கொண்டு வீட்டின் கிணற்றுக்குள் வீள்ந்துள்ளது தெனிலங்கையைசேர்ந்த கனறக வாகனம் ஒன்று,,,, இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீதியின் அருகாமையல் சென்ற ஆசிரியர் மீது நடைபெற்ற விபத்தொன்ரால் இன்று வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ரார் இன்னும் பல,,,, இதில் என்ன விசேட விடய்ம் என்ரால் இதுவரையில் அந்த வாகனசாரதிகள் மீது எந்த் வழக்குகளும் பதிவு செய்யப்ப்ட்வில்லை.

வெசாக் தினத்தை முன்னுட்டு அவை தொட்ர்பான நிகழ்வுகள் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள்து.குறிப்பாக சுண்ணாகமும் அதன் சார்ந்த்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வெசாக் கூடுகள் கட்டாய்மாய் கட்ட கட்டளை பிறப்பிக்கப்பட்டது.மேலும் யாழ் நகர வியாபாரதளங்களில் பெளத்த மத கொடி பறக்க விடும் படியும் கட்ட்ளை பிறப்பிக்கப்பட்டுள்ள்து.எனவே யாழ் அன்னை மீது சிங்கள சாயம் பூசுவதற்கு முயற்சி நடைபெருகின்றது.எடுத்து காட்டாக நயீனாதிவு நயீனாதிப வாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது ஆங்கில பெயர் பலகையில்.

இந்த சமாதானம் என்ற விடயத்தாள் யாழ் தனது அமைதியை துலைத்து நிற்கின்றது.மேலும் யாழ்ப்பாணம் மீது படை எடுக்கும் சிங்கள மக்களை தாங்கும் வலுவும் அதற்கு இல்லை. காரணம் கீழ்கட்டுமாண வசதிகள் சரியாக அமைக்காப்படவில்லை.

இவ்வளவு விடயம் தொடர்பாக கவனம் செலுத்தது தமிழ் மக்களது மனங்களை வெல்வது கடினம்.